நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சி செய்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் இன்று எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
மக்கள் நீண்டநேரம் இருளில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் ஆணையினூடாகவே நாட்டில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு வழிவகுத்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைக்கப்படும் பட்சத்தில் அவர்களின் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாக வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காலி முகத்திடல் போராட்டத்திறகு வழிவகுத்தது. இன்று அதில் பலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.