பாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் பாலர் பாடசாலைகளை சுயதொழில்போன்று நடத்தப்படுகின்றது.
இந்த நாட்டில் பாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்ததப்பட வேண்டும்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றாத அல்லது உயர்தரபரீட்சையில் சித்தியடையாத பெண்பிள்ளைகள் பெரும்பாலும் பாலர் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
பாலர் பாடசாலையில் இருந்தே ஒரு பிள்ளையின் கல்வி ஆரம்பமாகின்றது.
எனவே கல்வி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.