பலஸ்தீன மக்களை நோக்கி இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடுரத் தாக்குதலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பலஸ்தீன மக்களின் உரிமைக்காக இன்று சபையில் கவனம் செலுத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒவ்வொரு நிமிடங்களிலும் பலஸ்தீன மக்கள் பாரிய கெடுரமான மனிபேரவலத்தை பலஸ்தீன மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் பலஸ்தீன மக்களை நோக்கி முன்னெடுத்துள்ள இந்த கொடுரத் தாக்குதலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சபையில் அனைவரும் இன மத வேறுபாடின்றி அதற்கு கண்டனம் வெளியிட வேண்டும்.
இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்காக நாங்கள் முன் நிற்கிறோம்.
கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை இல்லாதொழித்து வருகின்றது.
அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.