20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது
அதன்படி இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஜூன் 4ம் தேதி ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 போட்டி விளையாடவுள்ளது
இந்நிலையில் இந்த தொடர் வரும் 22ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறுகிறது.
2024 – 2025 சீசனுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான புதிய சீருடையை இங்கிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த சீருடை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.