அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயலின் தாக்கத்தால் சுமார் 800,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மேயர் ஜான் விட்மயர் தெரிவித்தார்.
அதன்படி புயலின் தாக்கத்தால் நகரில் பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 129 -161 கிமீ வேகத்தில் வீசும் காற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
மேலும் அரசாங்கப் பாடசாலைகள் இன்று மூடப்படும் என்றும், அத்தியாவசியமற்ற அனைத்து ஊழியர்களையும் அன்றைய தினம் விடுமுறை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.