நாட்டின் விவசாயத்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு AI என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக இன்று கேகாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ள தனியார் துறை தொழில் முனைவோருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.