உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க தயங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.