முல்லைத்தீவு, தேராவில் வளைவு பகுதியில் நேற்றிரவு உழவு இயந்திரமொன்று குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ் விபத்தில் உழவனூர் பகுதியை சேர்ந்த 16 வயதான ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இவ்விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















