மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு, மே 26 முதல் ஜூன் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரத்தில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், அரச நிறுவனங்கள், மதத் தளங்கள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் போன்றவற்றில் டெங்கு பரவும் அபாயத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகரில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மரங்களை முழுமையாக அகற்றுவது அல்லது அபாயத்தை குறைப்பதற்காக கிளைகளை வெட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.