இந்தியாவின் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில், 5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மேற்குவங்காளத்தில் 76.05 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மராட்டியத்தில் 54.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.