இலங்கையின் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்வதாக நாட்டு மக்கள் கருதுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் போர் ஹெல்த் பொலிசி (Institute for Health Policy) நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை தவறான திசையில் செல்வதாக 75 சதவீத இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஏனைய நாட்டு மக்களின் நிலைப்பாடுகளை விட இலங்கை மக்களின் நிலைப்பாடு பாரிய அதிகரித்த போக்கை காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான இலங்கையின் போக்கு சரியான பாதையில் செல்வதாக 3 சதவீத கூட நம்பிக்கை வெளியிட இல்லை எனவும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரிய சாவல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்ஸ்டிடியூட் போர் ஹெல்த் பொலிசி (Institute for Health Policy) நிறுவனம் தெரிவித்துள்ளது.