ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசயின் மறைவையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதியின் மறைவை தொடர்ந்து இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.