யாழ், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.