நடிகை மனிஷா கொய்ராலா அண்மையில் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பிரித்தானியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான ‘நட்பு ஒப்பந்தத்தின் 100 ஆண்டுகளை’ கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை மனிஷா அண்மையில் பிரித்தானியா சென்றிருந்தார்.
இதன் போதே பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கை அவரது இல்லத்தில் வைத்து நடிகை மனிஷா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை மனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “யுனைடெட் கிங்டம் – நேபாள உறவுகள் மற்றும் எங்கள் நட்பு ஒப்பந்தத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாட 10 டவுனிங் தெருவுக்கு அழைக்கப்பட்டதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறது.
பிரதமர் ரிஷி சுனக், நமது நாடான நேபாளத்தை பற்றி அன்பாகப் பேசுவதைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரை அழைக்கும் சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டேன். பிரதமரும் அவரது குடும்பத்தினர் எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு மலையேற்றம் செய்ய வர உள்ளனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.