தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபரொருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக, சென்னை புரசைவாக்கத்திலுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணொன்றை வெளியிட்டிருந்தது.
குறித்த தொலைபேசி எண்ணுக்கு, இன்று காலை அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இவ்வாறான மிரட்டல் அழைப்புக்கள்கள் வழமையாக சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கே வரும்.
ஆனால், NIA அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து, மர்மநபர் தொடர்பு கொண்ட தொலைப்பேசி எண்ணை வைத்து சென்னை பொலிஸாருடன், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.