ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கையை, விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழு வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விமான மார்க்கத்தை விட்டு விலகிச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் ஹெலிகொப்டரின் இடிபாடுகளில், துப்பாக்கி ரவைகள் அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது