ஊழல் மோசடிகளில் தொடர்புபடாதவர்களுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழுமம்பில் ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நாம் பல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம்.
எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்குள் நாம் கூட்டணி தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவோம்.
அரசியல்கட்சிகள் பல எம்முடன் கலந்துரையாடல்களைன முன்னெடுத்திருந்தன கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளன.
அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் தேர்தலில் எம்முடன் இணைந்துசெயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஊழல் மோசடிகளில் தொடர்புபடாதவர்களுடனேயே நாம் கூட்டணி அமைப்போம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
ஊழல் மோசடியாளர்கள் பலர் கட்சியை அரசியல் தேவைக்காகக பயன்படுத்தினார்கள் அவ்வாறானவர்களுக்கு கட்சியில் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது” என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.