ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 45 போ் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமாா் 1,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ள குறித்த அகதி முகாமில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து குறித்த அகதி முகாம் முழுதும் தீக்கிரையாகியுள்ளது எனவும், இதில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள் மற்றும் சிறுவா்கள் என்றும் காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவமும் உறுதி செய்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
”ராஃபா பகுதியிலிருந்த ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 2 ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமாா் 8 மாதங்களாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.