ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார குழு விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், தலைமைத்துவ விவாதத்திற்கான பிரேரணையை தமது கட்சி எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்விரு விவாதங்களில் முதலில் பொருளாதார விவாதம், இரண்டாவதாக தலைமைத்துவ விவாதம் என்ற நிலைப்பாடு அப்படியே இருப்பதாகவும், பொருளாதார குழு விவாதத்திற்கான திகதியை உடனடியாக அறிவிக்குமாறும் உரிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.