ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வரவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை உள்ளூர் நிறுவனம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
இதில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்யும் பணிகளில் விலைமனுக்கோரல் சபையினால் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலீட்டிற்கான விலைமனுக்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 5 ஆம் திகதியுடன் முடிவடைந்ததுடன், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதனை மேலும் 45 நாட்களுக்கு நீடிக்க ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.