பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக, அந்நாடு பேரிடர் மேலாண்மைதுறை ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில், அவுஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியாவில், கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாரிய நிலச்சரவு ஒன்று ஏற்பட்டிருந்தது.
இந்த நிலச்சரிவில் குறைந்தது 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளானதாக குறிப்பிடப்படுகினது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்த நிலையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் புதையுண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 670க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த்தாக ஐ.நா. தெரிவித்தது.
இந்நிலையில், பப்புவா நியூ கினியவில் பதிவான இந்த நிலச்சரிவில் சிக்குண்டு 2000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக தற்போது அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மண்சரிவில் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில்,; மண்ணுக்குள் புதையுண்ட வீடுகள் 8 மீற்றர் ஆழத்தில் புதைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மேலும்;, கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.