பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈவினியர் புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
மேலும் எவினியார் புயலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டரைத் தாண்டும் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.