இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஜூன் 06 ஆம் திகதி நடத்த கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற உள்ளது.
பின்னர் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைக்கப்படும் நேரத்தில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.