ரஷ்ய – உக்ரேன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை இராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஜூன் 5 – 7 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டின் பிரதிநிதிகள் குழு ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.