துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சுலோவேகியாவின் பிரதமர் ‘ராபர்ட் பிகோ‘ தற்போது உடல் நலம் தேறிவருவதாகத் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ராபர்ட் பிகோ அண்மையில் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை மர்ம நபரொருவர் ராபர்ட் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து பிரதமர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை தாக்குதல் மேற்கொண்ட நபரைக் கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் ‘ராபர்ட் பிகோ‘ தற்போது நலமுடன் இருப்பதாக துணை பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.