திண்டுக்கல்லில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மாத்திரம் ரயிலில் மோதுண்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை அவசர, அவசரமாக கடப்பதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.