ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தியுடனேயே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி,
“ரணில் விக்ரமசிங்க குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தியுடனேயே உள்ளனர். ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்னவென்பதை இன்று அவர்கள் அறிந்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ தரப்பினரைப் பாதுகாத்து தனது அரசியல் தேவையைப் பூர்த்தி செய்கிறார்.
சஜித் பிரேமதாச எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டதில்லை. நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுப்பவர்.
எனவே நாட்டில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.
தேர்தல் தோல்விக்கு அஞ்சியே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகின்றார்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.