அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப் சீன செயலியான டிக் டொக்கில் புதிய கணக்கினை தொடங்கியுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவி வகித்த வேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டொக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
இந்தநிலையில் அவரே டிக் டொக்கில் இணைந்துள்ளமை உலகளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அவரை டிக் டொக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, பிரசாரம் மேற்கொள்வதற்காகவே இவ்வாறு டிக் டொக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.