வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர் திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை ,கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.
ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பேருந்து சேவைகளும் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகளும் இடம்பெறும்.
அத்துடன் அமுதசுரபி அன்னதான மடத்தில் பக்கதர்களுக்கு அன்னதானம் இடம்பெறும். ஆலய சூழல்களில் பக்தர்களின் நலன் கருதி சாரணர்கள், சென் ஜோன் அம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கம் மக்கள் நலன்புரிச் சங்கம் உள்ளிட்டவற்றின் தொண்டர்களும் சேவைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.