வெள்ளத்தில் சிக்குண்டு காணாமற் போன ஹொரணை அங்குருவத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹொரணை அங்குருவத்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் சடலம் தற்போது ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.