நாட்டில் வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், களுகங்கையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமையுடன் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.