நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் காலநிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஏனைய பிரதேசங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.