பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில், 84 புலம்பெயர்ந்தோர் சிறிய படகொன்றில் பணித்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்தோருடன் பிரான்சிலிருந்து புறப்பட்ட குறித்த படகு ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
84 புலம்பெயர்ந்தோர் பயணித்த இந்த சிறிய படகின் எஞ்சின், ஆங்கிலக்கால்வாயிக்கருகில் பழுதடைந்துள்ளது.
இதனையடுத்து, மீண்டும் பிரான்சுக்கு திரும்பும் முயற்சியில் குறித்த படகை திருப்பும் போது, எதிர்பாராமல் அந்த படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளிக்கொண்டிருக்கையில், தகவலறிந்து விரைந்த பிரான்ஸ் படகொன்று அவர்களை பத்திரமாக மீட்டுள்ளது.
இதில், 1 ஆறு மாதக் குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.