இஸ்ரேல் இராணுவம் ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது’ ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இச் செயல் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. மேலும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஓமன் அரசு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.