எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இதனை தெரிவித்தார்.
நாட்டை தன்னால் அபிவிருத்தி செய்ய இயலும் என நிரூபித்துக் காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்கவே, நாட்டிற்கு காணப்படும் ஒரே தீர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் குறித்து நாட்டு மக்கள் தற்போது சாதகமாக பேசுவதை தம்மால் அவதானிக்க முடிவதாகவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டார்.
ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில், சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, அனைவரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என, ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.