பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லொக்கோ- மோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ்; சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளகவும் தொடர்கிறது.
இதனால் இன்று காலை முதல் 10 புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் துணைப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.
அதன்படி, பதவி உயர்வு வழங்காமை மற்றும் ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நேற்று நள்ளிரவு முதல் லொக்கோ- மோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ்; சாரதிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்தது வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, ஐந்து புகையிரத நிலையங்களில் இரண்டின் சாரதிகள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்வதாகவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் அதன் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.