மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தான் பதவி விலகுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பா.ஜ.க. எம்.பியான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மத்திய அமைச்சராக, நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.
இதேவேளை பதவியேற்று சிலமணிநேரத்திலேயே அவர் பதவி விலக முடிவெடுத்துள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் தான் பதவி விலகியதாக வெளியாகிய செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர் ”மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தவறான செய்திகள் பரவி வருவதாகவும், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளமையை தான் பெருமையாக கருதுவதாகவும், கேரள மாநிலத்தின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு மோடி தலைமையில் பாடுபடுவேன்” எனவும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.