நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
அந்தவகையில் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 879 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த மே மாதம் மாத்திரம் 2, 647 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25 ,799 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகளவான நோயாளர்களாக 9 ஆயிரத்து 441 பேர் மேல் மாகாணத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.