நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்களில் வளர்ப்பு மாடுகளிடையே லம்பி எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லம்பி எனும் பெரியம்மை நோயானது மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாடு வளர்ப்பவர்களின் பொருளாதாரம் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.