இஸ்ரேல் – காசா போர்நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் ரஷ்யா வாக்களிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முழுமையான போர் நிறுத்தம், ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தல், உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை மீளப் பெறுதல் போன்ற விடயங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
இஸ்ரேலியர்கள் குறித்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுவதுமாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை ஹமாஸ் கோருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.