நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 5 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐவரில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐவரில் மூவருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ளதுடன் இது 63.5 வீதம் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 வீதமாக அதிகரித்துள்ளதுடன் நகர்ப்புறங்களில் கணினி கல்வியறிவு 52.9 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் அதிக கணினி அறிவைக் கொண்ட மக்கள் உள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்ட மக்கள் இருப்பதாக தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.