• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஏமன் கடலில் மூழ்கிய படகு – 49 பேர் உயிரிழப்பு : 140 பேர் மாயம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/12
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சுமார் 260 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகொன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் 49 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 140 பேரை காணவில்லை என ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் 31 பெண்களும் அடங்குவதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிச்சென்ற படகொன்று இவ்வாறு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக ஐநா சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக்கொண்டு ஏடன் வளைகுடா வழியாக பயணித்த படகொன்று, 320 கிலோமீற்றர் பயணித்த நிலையில், ஏமனின் தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று (11) கடலில் மூழ்கியதாக அறிவித்துள்ளது.

இந்த விபத்தில், குறைந்தது 49 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், 140 பேர் வரை காணவில்லை என அறிவித்துள்ள ஐநா சர்வதேச அமைப்பு, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளது.

மேலும், படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமதலி அபுனஜெலா,

புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான மற்றுமொரு நினைவூட்டலாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவசரமாக புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் முகமதலி அபுனஜெலா வலியுத்தியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, யேமனில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இருந்தபோதிலும், 2021 முதல் 2023 வரை ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27,000 இலிருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 3,80,000 புலம்பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளதாகவும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related

Tags: Boat accidentIOMYemen
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மைத்திரிபால சிறிசேனவின் தடை நீடிப்பு!

Next Post

தென் கொரியாவில் நிலநடுக்கம்!

Related Posts

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

2026-01-25
அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்
இலங்கை

நாளை முதல் அரச வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம்

2026-01-25
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை!

கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்
இலங்கை

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
Next Post
தென் கொரியாவில் நிலநடுக்கம்!

தென் கொரியாவில் நிலநடுக்கம்!

நாட்டில் ஈக்களின் பெருக்கம் அதிகரிப்பு: பொது மக்களே உஷார்!

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

0
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

0
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.