தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் இன்று (12) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட் (4.8 Magnitude) அலகுகளாகப் பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 8 கிலோமீற்றர் (5 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், தென் கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் தென்மேற்கு மாவட்டமான புவான் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
எனினும், வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்திருப்பார்கள் என்றும், வீட்டின் ஜன்னல்களில் உடைப்பு மற்றும் பொருள்கள் கீழே விழும் அளவுக்கு இந்த நிலநடுக்கம், வலுவாக இருந்ததாக தென் கொரியாவின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.