இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தினால் மூன்றாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்றாவது தவணைக்கான வெற்றிகரமான மீளாய்விற்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.