ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் நாடு திரும்புவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளது.
இந்தக் குழுவினர் சில நாட்கள் ரஷ்யாவில் தங்கவுள்ளதுடன், அந்த நாட்களில் உரிய அதிகாரிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இலங்கையர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, சுமார் 600 பேர் இணைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் நாட்டுக்கு வர விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவுக்குச் சென்ற நிலையில், இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.