ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவரோடு இணையப் போவதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மகிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கானை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, தற்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றன. அதிலும் ஜனாதிபதி ரணிலுடையடைய செயல்பாடு கோடிபதிகளை முன்னிறுத்தி நடக்கிறதே ஓழிய சாதாரண மக்களுக்கானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, நான் இப்போது புதிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதுடன், எனது புதிய அரசியல் பயணத்துக்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.