61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுவதால் ஏப்ரல் 15-திகதி முதல் ஜூன் 14-திகதி வரையில் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது
இன்னிலையில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் ராமேஸ்வரம் துறைமுகம் கடல் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.