லிபியாவில் தங்கி இருந்த 163 அகதிகள் சிறப்பு விமானம் மூலம் பங்களாதேஸிற்குத் திரும்பியுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது
அதன்படி ஆப்பிரிக்க நாடான லிபியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமானோர் அங்கிருந்து கடல் வழியாக சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர்
எனவே அவர்களை மீட்பதற்கான முயற்சி நடைபெற்று வந்த நிலையில் லிபியாவில் தங்கி இருந்த இவர்கள் வங்கதேசம் திரும்பியுள்ளனர்
மேலும் இந்த அமைப்பானது இதுவரை லிபியாவில் தங்கி இருந்த சுமார் 80 ஆயிரம் அகதிகள் தங்களது தாயகம் திரும்ப உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.