ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்தாலியில் நடந்த உச்சிமாநாட்டின் போது உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
மேலும் எதிர்வரும் வாரங்களில் ரஷ்ய ஜனாதிபதி வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தென்கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது
அத்துடன் உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் தலையிடக் கூடாது என ரஷ்ய ஜனாதிபதி பலமுறை வலியுறுத்தி வந்த நிலையில், சமீபத்தில் நான்கு ரஷ்ய கடற்படைக் கப்பல்கள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் ஆகியவை கியூபாவுக்கு வந்திருந்தமையும் குறிப்பிடததக்கது.