T20 உலக கிண்ணபோட்டியில் உகாண்டா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 41 என்ற இலகு வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 5.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 9 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 41 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.